< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளில் தாமதம் - அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை
|21 Aug 2022 1:06 AM IST
விபத்து ஏதேனும் நேரிட்டால் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய நேரிடும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரித்தார்.
சென்னை,
சென்னையை அடுத்த மணப்பாக்கம், கொளப்பாக்கம், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. குழாய்களை பதித்த பிறகு சாலைகளை ஒப்பந்ததாரர்கள் சீரமைக்காமல் விட்டுவிடுவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், அப்பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகள் மெதுவாக நடைபெறுவதற்கு அதிகாரிகளை கண்டித்த அவர், விபத்து ஏதேனும் நேரிட்டால் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய நேரிடும் என்றும் தானே முன்வந்து புகார் அளிப்பேன் என்றும் எச்சரித்தார்.