ராமநாதபுரம்
910 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
|ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 910 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.
பனைக்குளம்,
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 910 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.
10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 28-ந் தேதி 8-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவும் 30-ந் தேதி 9-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும் நேற்று 1-ந் தேதி 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து நேற்று கல்லூரி வளாகத்தில் 10-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கல்லூரியின் தாளாளர் செல்லத்துறை அப்துல்லா தலைமை தாங்கி விழாவை நடத்தி வைத்தார். இதில் ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார்.
910 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் பழனிச்சாமி கலந்துகொண்டு கல்லூரியின் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 80 மாணவ-மாணவிகளுக்கு முதுகலைப்பட்டமும் 730 பேர்களுக்கு இளங்கலை பட்டம் உள்பட 910 மாணவ -மாணவிகளுக்கு வழங்கி பாராட்டி பேசினார். இதில் முதலிடம் பெற்ற 6 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டன. 51 பேர் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்திருந்தனர். அவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்பரிசுகளை அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பழனிச்சாமி வழங்கி மாணவர்களுக்கு நல்ல பல ஆலோசனைகளையும் கல்வியின் சிறப்புகள் பற்றியும் விளக்கமாக பேசினார். இதைத் தொடர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கல்லூரியின் துறை வாரியாக தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியினை ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் அயாஸ் அகமது, ஜெனித் மிஸ்ரியா, ஸ்டாலின், தமிழ் துறை பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.