மதுரை
568 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
|பி.கே.என். கலை அறிவியல் கல்லூரியில் 568 மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் வழங்கினார்.
திருமங்கலம்
பி.கே.என். கலை அறிவியல் கல்லூரியில் 568 மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
திருமங்கலம் பி.கே.என் கலை அறிவியல் கல்லூரியில் 22 மற்றும் 23-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் செல்வராஜ் பட்டமளிப்பு விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கணேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கலந்து கொண்டு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பட்டம் பெற்று வெளியே செல்லும் இளைஞர்கள் நம்பிக்கையுடன் மற்றவர்களின் துணையின்றி வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் வரும் அதை சாதனைகளாக மாற்றி வெற்றி பெற வேண்டும்.
புதுமைகளை அறிந்து கொள்ள வேண்டும்
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வரை தங்களை தயார் படுத்திக் கொண்டு அதற்காக காத்திருக்க வேண்டும். நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் மாணவச் செல்வங்கள் மிகவும் முக்கியமானவர்கள். வெளியே சென்று வேலைகள் செய்தாலும் தொழில் செய்தாலும் தங்களுடைய படிப்பு மற்றும் அறிவு பெருக்குதலை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
தற்போது தொழில் நுட்ப வசதிகள் அதிகமாக மாணவர்களுக்கு கிடைக்கிறது. செல்போன், கணினி போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி புதுமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
568 மாணவர்களுக்கு பட்டம்
கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வித்யா சாலா சங்க கமிட்டி மாஸ்கோ செல்வம் மற்றும் பட்டம் பெற்ற மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மொத்தம் 568 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற மாணவர்கள் துணைவேந்தர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
முன்னதாக பல்கலைக்கழக தேர்வுகளில் முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பட்டங்களை துணை வேந்தர் வழங்கினார். இறுதியில் கல்லூரி பொருளாளர் ஜெயசீலன் நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாலையில் கல்லூரி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கல்லூரி நிர்வாகிகள் சங்க கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.