< Back
மாநில செய்திகள்
367 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

367 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

பொள்ளாச்சி அரசு கல்லூரியில் 367 மாணவ-மாணவிகளுக்கு பட்டத்தை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் வழங்கினார்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா நேற்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுமதி தலைமை தாங்கினார். கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். விழாவில் கடந்த 2017-2018, 2018-2019 ம் ஆண் கல்வி ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து படித்த 367 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்