< Back
மாநில செய்திகள்
450 மாணவ மாணவிகளுக்கு பட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

450 மாணவ மாணவிகளுக்கு பட்டம்

தினத்தந்தி
|
31 May 2022 10:45 PM IST

டாக்டர் ஆர் கே எஸ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 450 மாணவ மாணவிகளுக்கு பட்டம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே டாக்டர் ஆர்.கே.எஸ். கல்லூரியில் 21-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் குமார், செயலாளர் கோவிந்தராஜு, பொருளாளர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை வாசித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் கதிரேசன் கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த 450 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உறுதி மொழி செய்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசும் போது, பட்டம் பெறும் மாணவர்கள் முதலில் பெற்றோர்களை என்றும் மதிக்க வேண்டும். கல்வி கற்கும் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரியை என்றும் பெருமைக்குரியதாக கருதவேண்டும். வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கையோடு முயற்சி செய்ய வேண்டும் என்றார். விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்