< Back
மாநில செய்திகள்
தானிய விதைகளில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்
விருதுநகர்
மாநில செய்திகள்

தானிய விதைகளில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

தினத்தந்தி
|
17 Nov 2022 12:30 AM IST

தானிய விதைகளில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரி கூறினார்.


எதிர்வரும் கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை விவசாயத்தினை மேற்கொள்ள விவசாயிகள் தற்போது தயாராகி வருகிறார்கள். விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியாக மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அனைத்து விற்பனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் ரக விதைகளை, உரிமம் பெற்ற விதை விற்பனையாளரிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விவசாயிகள் தாங்கள் வாங்கி விதைத்த தானிய விதைகள் தரமற்றதாகவோ முளைப்பு திறனில் குறைபாடு தொடர்பான புகார் ஏதேனும் பெறப்பட்டால் உடனடியாக கீழ்கண்ட டெலிபோன் எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் விருதுநகர் 99442 06655, விதை ஆய்வாளர் விருதுநகர் 96298 72286.

Related Tags :
மேலும் செய்திகள்