புது பைக்கில் கோளாறு... நுகர்வோர் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு - உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்
|புதிதாக வாங்கிய பைக்கில் பிரேக் டிஸ்க் பழுதானதால் வாடிக்கையாளருக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
புதிதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தில் பிரேக் டிஸ்க் பழுதானதால் வாடிக்கையாளருக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை படப்பை பகுதியைச் சேர்ந்த அனிதா மேரி என்ற பெண், கடந்த 2019-ம் ஆண்டு சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய பைக் வாங்கியுள்ளார். இருசக்கர வாகனம் வாங்கிய 3 மாதத்தில் பிரேக் டிஸ்க் பழுதானதால், சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரிசெய்துள்ளார்.
ஆனால், அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் பிரேக் டிஸ்க் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, மனுதாரருக்கு வாகனத்தை விற்பனை செய்த ஷோரூம், சர்வீஸ் சென்டர் மற்றும் வாகனத்தின் தொழிற்சாலை இணைந்து வாகனத்தின் முழு தொகையான 80 ஆயிரம் ரூபாயும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் வழக்கு செலவாக 15 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது.