< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
சமூகவலைதளத்தில் அவதூறு; வாலிபர் கைது
|2 Sept 2023 1:58 AM IST
சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை டவுன் பாறையடி தெருவை சேர்ந்த ஜோசப், சுடலைராஜன் (வயது 23), சுமன் ஆகியோர் ஒரு சமூகத்தை சேர்ந்த நபர் பற்றி அவதூறாக பேசி அதனை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார், அந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் சுடலைராஜனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.