< Back
மாநில செய்திகள்
அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு 27-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
மாநில செய்திகள்

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு 27-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

தினத்தந்தி
|
14 Sept 2023 11:51 PM IST

வி.எச்.பி. முன்னாள் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனை 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை,

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவரும், பேச்சாளருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் அம்பேத்கர் குறித்தும், பட்டியலின சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் இரா.செல்வம், சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் ஆர்.பி.வி.எஸ். மணியனை கைது செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் தவறான புரிதல் காரணமாக தன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மணியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி அல்லி, வரும் 27-ந்தேதி வரை மணியனை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்