< Back
மாநில செய்திகள்
டோனி தொடர்ந்த அவதூறு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை
மாநில செய்திகள்

டோனி தொடர்ந்த அவதூறு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை

தினத்தந்தி
|
15 Dec 2023 11:47 AM IST

மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு டோனி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்