< Back
மாநில செய்திகள்
சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி குறித்து அவதூறு பதிவு: 2 பேர் மீது போலீசில் புகார்
மாநில செய்திகள்

சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி குறித்து அவதூறு பதிவு: 2 பேர் மீது போலீசில் புகார்

தினத்தந்தி
|
1 Jun 2024 12:08 AM IST

சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை ஆபாசமாக சித்தரித்து மீம்ஸ் புகைப்படங்கள் பதிவு செய்த 2 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

பிரதமர் மோடி தியான நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். இந்தநிலையில் மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி இறைஞ்சிலி கடுங்கண்ணி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடியை ஆபாசமாக சித்தரித்து மீம்ஸ் புகைப்படங்கள் பதிவு செய்துள்ளார். இதேபோல் சிதறால் பகுதியை சேர்ந்த ஒருவரும் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் பதிவிட்டுள்ளார். இவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு குமரி மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் விரிகோடு பகுதியை சேர்ந்த சுஜின்ராஜ் (வயது37) மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்