இந்துக்கள் குறித்து அவதூறு... ஆ.ராசா கூறிய வார்த்தை, திமுக தலைவர் குடும்பத்துக்கும் பொருந்துமா ? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
|தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது
சென்னை,
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கடந்த 6-ந் தேதி வேப்பேரி, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. .இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசா மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்துக்கள் குறித்த ஆ.ராசாவின் பேச்சை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை வடபழனியில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.அதில் பேசிய அவர் கூறியதாவது ;
இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ராசா சொல்லக்கூடாத வார்த்தையை ,கீழ்த்தரமான வார்த்தையை கூறியுள்ளார்.மேலும் இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ராசா கூறிய வார்த்தை, நாட்டு மக்களுக்கு பொருந்துமா ? ,திமுக தலைவர் குடும்பத்துக்கும் பொருந்துமா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.