< Back
மாநில செய்திகள்
தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலி

தினத்தந்தி
|
19 Oct 2023 12:00 AM IST

தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலியானது.

பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் செஞ்சேரி ஏரிக்கரை ஓரமாக உள்ள வயலுக்கு நேற்று காலை வந்த ஆண் புள்ளி மான் ஒன்றை தெருநாய்கள் கடித்து குதறின. இதில் உடலின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற விவசாயிகள் பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மானின் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் உடல் வன காப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்