< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பாலக்கோடு அருகேகிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
|31 July 2023 12:30 AM IST
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவருடைய 60 அடி ஆழ கிணற்றில் நேற்று முன்தினம் இரவு 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது. அப்போது கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் மான் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. நேற்று காலை மானின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர். பின்னர் இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் தவித்த புள்ளிமானை கயிறு கட்டி உயிருடன் மீட்டு பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் புள்ளி மானை பிக்கிலி வனப்பகுதியில் உள்ள பனைக்குளம் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.