< Back
மாநில செய்திகள்
நவீன் பட்நாயக் சகோதரி மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மாநில செய்திகள்

நவீன் பட்நாயக் சகோதரி மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தினத்தந்தி
|
17 Sept 2023 1:07 PM IST

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தாவின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியுமான கீதா மேத்தா வயது மூப்பு காரணமாக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 80. இவருடைய இறப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னுடைய இரங்கலை பதிவிட்டுள்ளார்.

அதில் "ஒடிசா முதல் -மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியும், பிரபல எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கீதா மேத்தாவின் மறைவு செய்தி என்னை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு கீதா மேத்தாவின் பங்களிப்பு மகத்தானது. மாண்புமிகு நவீன் பட்நாயக் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என அதில் கூறியுள்ளார்.

மறைந்த கீதா மேத்தா 'கர்ம கோலா', 'ஸ்னேக் அண்ட் லேடர்ஸ்', 'எ ரிவர் சூத்ரா', 'ராஜ்', 'தி எடர்னல் கணேஷா' உள்ளிட்ட சில புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்