நாமக்கல்
கார்த்திகை தீபத்திருவிழா
|திருச்செங்கோட்டில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் இறைவன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வை தீபத் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இதையடுத்து கார்த்திகை மாத தீபத் திருவிழாவையொட்டி அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் உடன் வந்து கோவிலின் பிராதன கோபுரத்தின் அருகில் நெய்தீபம் ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உச்சி பிள்ளையார் கோவிலில் திருக் கார்த்திகை தீபவிழா அறக்கட்டளை சார்பில் கூம்பு கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டனர். தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலின் மேற்கு வாயில் அருகில் பெருமாள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தீபத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல கார்த்திகை தீபத் திருவிழா கமிட்டி சார்பில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.