< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
பத்திர பதிவுக்கு வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பு
|21 Oct 2022 12:15 AM IST
பத்திர பதிவுக்கு வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் சிரமம் அடைந்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 30 பத்திரங்கள் பதிய டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பத்திரம் பதிய வந்த பொதுமக்கள் காலை முதல் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மிகவும் மெதுவாக பணி செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சார் பதிவாளரிடம் பொதுமக்கள் கேட்டபோது சர்வர் பிரச்சினையாக உள்ளது என்று கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.