பெரம்பலூர்
செல்போன் கதிர்வீச்சால் குறையும் மூளை செயல்பாடு
|செல்போன் கதிர்வீச்சால் மூளை செயல்பாடு குறைவதாக கூறப்படுகிறது.
பெரம்பலூரை அடுத்த பேரளியை சேர்ந்த உளவியல் ஆலோசர் நீலமேகம்சீனிவாசன்:- நவீன யுகத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, காலையில் எழுந்தது முதல் இரவில் தூங்கச்செல்லும் வரை செல்போனின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. புத்தக வாசிப்புகள் குறைந்துவிட்டன. செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால், அதன் கதிர்வீச்சுகள், கேமராவின் கதிர்நுண் அலைகளால், மூளையின் செயல்பாடு குறைந்து போகிறது. எதற்கெடுத்தாலும் 'செல்பி' எடுக்கும் தாக்கம் உருவாகிவிட்டால், புறச்சூழல்களை மறந்து, செல்பி எடுக்க வேண்டும் என்ற உந்துதல் கவனச்சிதறலை ஏற்படுத்தும். அதன் தாக்கம் உயிரிழப்பு, உடைமைகள் இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே 'செல்பி' மோகத்தை கைவிடுவது நல்லது. இரவில் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு செல்போனை சற்று தொலைவிலேயே வைத்துவிடுவது நல்லது. 'செல்பி' மோகத்திற்கு அடிமையானவர்கள், மெல்ல, மெல்ல அதில் இருந்து விடுபட செல்போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாத்தலங்களுக்கும், உயரமான இடங்களுக்கும் செல்லும்போது 'செல்பி'யை விட உயிர்-உடைமை முக்கியம் என்பதை உணர்ந்து செல்பி எடுக்காமல் இருப்பதால், அசம்பாவிதங்களை தவிர்ப்பதுடன், அதனால் ஏற்படும் இழப்புகளையும் தடுக்க முடியும்.