< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
|28 Aug 2023 12:15 AM IST
சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
தொண்டி,
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 2 சாலைகள் தரம் உயர்த்துவதற்காக நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:- திருவாடானை யூனியன் டி.நாகனி ஊராட்சி அல்லிக்கோட்டை பாண்டி முனியய்யா கோவில் சாலை முதல் அதன்குடி பஸ் நிறுத்தம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை, அல்லிக்கோட்டை ஏ.டி. காலனி சாலை முதல் நெய்வேல் பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலை என 2 சாலைகளையும் நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைப்பதற்கு திருவாடானை யூனியன் கூட்டத்தில் யூனியன் தலைவர் முகமது முக்தார் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்த 2 சாலைகளும் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.