< Back
மாநில செய்திகள்
குன்னூர் மலை ரெயில்களை டீசல் இஞ்சின் ரெயில்களாக மாற்ற முடிவு
மாநில செய்திகள்

குன்னூர் மலை ரெயில்களை டீசல் இஞ்சின் ரெயில்களாக மாற்ற முடிவு

தினத்தந்தி
|
10 July 2022 5:11 PM IST

குன்னூர் மலை ரெயில்களை டீசல் இஞ்சின் ரெயில்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி,

குன்னூர்-ஊட்டி மற்றும் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ரெயில்களில் உலை எண்ணெய் (Furnace oil) இஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உலை எண்ணெய் இஞ்சின்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் அதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது. இதனையடுத்து குன்னூர் மலை ரெயில்களை டீசல் இஞ்சின் ரெயில்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்