< Back
மாநில செய்திகள்
கிராமப்புற மக்களை சந்திக்க பிரசார நடைபயணம் மேற்கொள்ள முடிவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கிராமப்புற மக்களை சந்திக்க பிரசார நடைபயணம் மேற்கொள்ள முடிவு

தினத்தந்தி
|
5 March 2023 6:36 PM GMT

கிராமப்புற மக்களை சந்திக்க பிரசார நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் டெய்சி அகில இந்திய மாநாடு முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் அகஸ்டின் மாவட்டக்குழு முடிவுகளை விளக்கி பேசினார். விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற மக்களை சந்திக்கும் வகையில் பிரசார நடைபயணம் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் வருகிற 10, 11-ந் தேதிகளிலும், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தெருமுனை கருத்தரங்கமும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கிட, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபயண பிரசாரமும் நடத்திட சிறப்பு பேரவை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்