மதுரை
அடகு நகையை மீட்க வேண்டும் என ஏமாற்றிநிதி நிறுவன மேலாளரிடம் ரூ.4½ லட்சம் மோசடி
|அடகு நகையை மீட்க வேண்டும் என ஏமாற்றி நிதி நிறுவன மேலாளரிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரூ.4 லட்சத்து 53 ஆயிரம்
மதுரை கல்லம்பலை சேர்ந்தவர் சங்குள் காந்தி. இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்திற்கு போன் செய்துள்ளார். அந்த நிறுவனம் வங்கியில் இருக்கும் அடகு நகையை மீட்டு விற்பனை செய்து கொடுக்கும் தனியார் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் மேலாளர் சரவணக்குமாரிடம் சங்குள் காந்தி வங்கியில் உள்ள தன்னுடைய நகைகளை மீட்டு விற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு மதுரை வந்தனர். பின்னர் நகைக்கு உரிய 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை சங்குள்காந்தி மற்றும் கார்த்திக் ஆகியோரிடம் கொடுத்து விட்டு பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து வாங்கி கொண்டார். பின்னர் சங்குள்காந்தி, கார்த்திக் ஆகியோர் பணத்துடன் வங்கிக்குள் சென்றனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவர்கள் நகையை வாங்குவதற்கு 2 மணி நேரம் கழித்து வருமாறு தெரிவித்துள்ளனர்.
புகார்
எனவே வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள தேங்காய் கடைக்கு சங்குள்காந்தி, கார்த்தி ஆகியோர் மேலாளர் சரவணக்குமாரை அழைத்து சென்றனர். அங்கு கடையில் அவரை உட்கார செய்து விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. பல மணி நேரம் காத்திருந்த சரவணக்குமார் இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாாரணை நடத்தி சங்குள்காந்தி, கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்தனர்.