< Back
மாநில செய்திகள்
பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

தினத்தந்தி
|
12 Oct 2023 2:12 AM IST

அரியலூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.

தஞ்சாவூர்;

அரியலூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.

பட்டாசு ஆலை விபத்து

அரியலூர் மாவட்டம் திருமானூர் தாலுகா வெற்றியூர் ஊராட்சியில் உள்ளது விரகாலூர் கிராமம். இங்கு செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த 9-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலை கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மேலும் ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார்கள். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி ஒருவர் இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 11 ஆனது. காயம் அடைந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 6 பேரும், அரியலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

12 ஆக உயர்வு

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த கண்டியூர் ஆதிகரையை சேர்ந்த சரவணன் மகன் சுந்தர் (வயது21) என்பவர் நேற்று இரவு 9.45 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்