< Back
மாநில செய்திகள்
காற்றாலை பண்ணை மேலாளருக்கு கொலை மிரட்டல்; 5 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காற்றாலை பண்ணை மேலாளருக்கு கொலை மிரட்டல்; 5 பேர் கைது

தினத்தந்தி
|
22 July 2023 3:03 AM IST

பணகுடி அருகே காற்றாலை பண்ணை மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணகுடி:

பணகுடி அருகே வடலிவிளையில் பிரேசில் நாட்டின் பங்களிப்புடன் காற்றாலை பண்ணை அமைக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பிரேசிலை சேர்ந்த கார்லோஸ் என்பவர் காற்றாலை பராமரிப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், 7 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கார்லோஸ் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், முருகன், சுதர்சன், சிதம்பரம், அரவிந்தன் ஆகிய 5 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பா.ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், அவரது மகன் பாலாஜி விமலன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்