< Back
மாநில செய்திகள்
ஊழியருக்கு கொலை மிரட்டல்; தொழிலாளி கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஊழியருக்கு கொலை மிரட்டல்; தொழிலாளி கைது

தினத்தந்தி
|
18 Oct 2023 2:47 AM IST

ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பெரியவிளையை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது44), தொழிலாளி. இவர் மீது குழித்துறை கோர்ட்டில் ஒரு அடிதடி வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் ஆஜராக சுரேஷ்குமார் கோர்ட்டுக்கு வந்தார். அவர் கோர்ட்டு வளாகத்தில் வந்த போது விசாரணைக்கு ஆஜராகுமாறு கிளார்க் லாரன்ஸ் (52) அழைத்தார். அப்போது ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார், கோர்ட்டு ஊழியர் லாரன்சை பார்த்து, 'வழக்கை முடிக்க மாட்டாயா?' என கேட்டு கூச்சலிட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து லாரன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்