< Back
மாநில செய்திகள்
தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
தேனி
மாநில செய்திகள்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
19 May 2022 11:43 PM IST

உப்புக்கோட்டையில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்சாமி (வயது50). கூலித்தொழிலாளி. இவருக்கும், தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்குமார் (24) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமார் கத்தியை காட்டி பால்சாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து, முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்