< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
|12 Feb 2023 12:15 AM IST
திண்டுக்கல் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள ரெங்கசமுத்திரபட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரவணக்குமார் மனைவி சரண்யா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகேயன் அடிக்கடி சரண்யாவுடன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சரண்யா புகார் கொடுத்தார். அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை ைகது செய்தனர்.