< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
|22 Jan 2023 12:15 AM IST
போடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியை சோ்ந்தவர்கள் ராமச்சந்திரன், கண்ணன். கடந்த 19-ந்தேதி தெருவில் நடந்து சென்ற ஒரு பெண்ணை இவர்கள் இருவரும் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதை அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகாா் கொடு்த்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.