சிவகங்கை
போக்குவரத்து ஊழியருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
|காரைக்குடியில் போக்குவரத்து ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி
காரைக்குடியில் போக்குவரத்து ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை மிரட்டல்
காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் காரைக்குடி கிளையில் பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தின் போது காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் பஸ் புறப்படும் நேரம் குறித்து தனியார் பஸ் உரிமையாளர் மணிகண்டன், அவரது வேலையாட்கள் மாத்தூரை சேர்ந்த ராஜ்குமார்(23), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த பாண்டியராஜ்(28) ஆகியோருக்கும் பரிசோதகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அரசு பஸ்சை செல்ல விடாமல் மறித்து பரிசோதகரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
2 பேர் கைது
இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் மணிகண்டன், ராஜ்குமார், பாண்டியராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக ராஜ்குமார், பாண்டியராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.