< Back
மாநில செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்: கஞ்சா வியாபாரி கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்: கஞ்சா வியாபாரி கைது

தினத்தந்தி
|
8 Aug 2022 8:45 PM IST

கொலை மிரட்டல் விடுத்த கஞ்சா வியாபாரி கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்யம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அபினேஷ் (வயது 21), என்ற வாலிபரை மடக்கி பிடித்தார். அப்போது அந்த வாலிபர் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா வியாபாரி அபினேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ½ கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்