< Back
மாநில செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

காட்டுமன்னார்கோவில் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சங்கொல்லை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் மாரியப்பன் மனைவி நதியா (வயது 37). இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொண்டாயிருப்பு பகுதியை சேர்ந்த பாரதி(31), ராஜேஷ்குமார்(33) ஆகியோர் தங்களது பகுதிக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறி நதியாவை திட்டியதாக தெரிகிறது. அதற்கு நதியா ஏன் என்னை திட்டுகிறீர்கள் என அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து நதியாவை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் நதியா கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து, பாரதி, ராஜேஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்