< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
கரகாட்ட பெண் கலைஞருக்கு கொலை மிரட்டல்:போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
|13 April 2023 2:19 AM IST
கரகாட்ட பெண் கலைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது
மதுரை திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமேசுவரி (வயது 29). கரகாட்ட கலைஞரான இவர், கோவில் திருவிழாக்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கரகாட்டக் கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் கரகாட்ட நிகழ்ச்சிகளை சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில் பரமேசுவரிக்கு சிலர் செல்போன் மூலம் ஆபாசமாகப்பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த பரமேசுவரி, கொலை மிரட்டல் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரை அலங்காநல்லூர், நெல்லை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலரின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.