< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பழ வியாபாரிக்கு கொலை மிரட்டல்
|13 Dec 2022 12:30 AM IST
கம்பத்தில் பழ வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 43). பழ வியாபாரி. இவருக்கும், பழம் விற்பனை செய்யும் சுருளிப்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (46) என்பவருக்கும் இடையே வியாபாரம் சம்பந்தமாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8-ந்தேதி சுரேஷ், அவரது மகன் வசந்த் உடன் பாஸ்கரன் கடைக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாஸ்கரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சுரேஷ் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.