< Back
மாநில செய்திகள்
கார் டிரைவருக்கு கொலை மிரட்டல்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கார் டிரைவருக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
5 Oct 2023 12:30 AM IST

கார் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 56). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊரில் அம்மன் கோவில் கொடை விழாவில் டிஜிட்டல் போர்டு வைத்தது தொடர்பாக இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பேச்சிமுத்து, மனோகர் ஆகியோருக்கு பிரச்சினை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் பேச்சி முத்து, மனோகர் ஆகியோர் சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர். அவர் வீட்டைபூட்டி உள்ளே இருந்தார். 2 பேரும் அவரை அவதூறாக பேசி வீட்டு கதவை அரிவாளால் வெட்டியதாகவும், வெளியே நின்ற அவரது 2 கார்களை சேதப்படுத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிதம்பரம் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்