< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
உதவி பொறியாளருக்கு கொலை மிரட்டல்
|9 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி அருகே உதவி பொறியாளருக்கு கொலை மிரட்டல் 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் ஏரியில் நீர் நிரம்பி உபரி நீர் செல்லும் கோடி பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதை கள்ளக்குறிச்சி நீர் பாசன பிரிவு உதவி பொறியாளர் விஜயகுமரன் பார்வையிட சென்றார். அப்போது அங்கு வந்த பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த குள்ளன் மகன் தணிகாசலம்(வயது 21), கலியன் மகன் வெள்ளிபிள்ளை(42) ஆகிய 2 பேரும் சேர்ந்து விஜயகுமரன் மற்றும் அவருடன் வந்த பணியாளர்களை அசிங்கமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விஜயகுமரன் கொடுத்த புகாரின் பேரில் தணிகாசலம், வெள்ளிபிள்ளை ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.