< Back
மாநில செய்திகள்
திருப்பூரில் காப்பக குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மாவட்ட கலெக்டர் வினீத் விளக்கம்
மாநில செய்திகள்

திருப்பூரில் காப்பக குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மாவட்ட கலெக்டர் வினீத் விளக்கம்

தினத்தந்தி
|
6 Oct 2022 3:54 PM IST

திருப்பூரில் காப்பக குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூரில் காப்பக குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அம்மாவட்ட கலெக்டர் வினீத் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், காப்பகத்தில் நேற்று இரவு உணவு சாப்பிட்ட 14 சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். விடுதியில் வழங்கப்பட்ட உணவு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தான் சிறுவர்கள் இறப்புக்கான காரணம் தெரியும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்