< Back
மாநில செய்திகள்
அமைச்சர் சாமிநாதனின் தந்தை மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

அமைச்சர் சாமிநாதனின் தந்தை மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தினத்தந்தி
|
23 Feb 2024 11:54 AM IST

அமைச்சர் சாமிநாதனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் கூறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர். சா.பெருமாள்சாமி மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் அருமைத் தந்தை முத்தூர். சா.பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.

தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார். பெருமாள்சாமி அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்