< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி வாலிபர் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
1 July 2022 3:35 AM IST

ரெயில் மோதி வாலிபர் சாவு

நாகர்கோவில்:

குழித்துறை ரெயில் நிலையம் அருகே சுரங்க ரெயில் பாதை பகுதியில் ஒரு வாலிபர் ரெயில் மோதி இறந்த நிலையில் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நீலம் மற்றும் வெள்ளை நிறம் கலந்த சட்டையும், அரைக்கால் டவுசரும் அணிந்திருந்தார். எனவே அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? அவர் மன நிலை பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்