< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ரெயில் மோதி வாலிபர் சாவு
|24 Jun 2022 3:15 AM IST
ஈரோடு அருகே ரெயில் மோதி வாலிபர் இறந்தாா்.
ஈரோடு:
ஈரோடு காவிரி ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் இறந்தவர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆயகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் அஜித்குமார் (வயது 22) என்பதும், அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.