< Back
மாநில செய்திகள்
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
21 Jun 2022 10:21 PM IST

திருக்கோவிலூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி சாவு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள தகடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராமச்சந்திரன்(வயது 38). தொழிலாளியான இவர் அதே ஊரில் உள்ள வயல் வெளி ஒன்றில் வேலைக்கு சென்றார். ஆனால் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் ராமச்சந்திரனை தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மதியழகன் என்பவருக்கு சொந்தமான கரும்பு நிலத்தில் உடல் கருகிய நிலையில் ராமச்சந்திரன் இறந்து கிடந்தார். அருகில் மின் கம்பி அறுந்த நிலையில் கிடந்தது. இதனால் அவர் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி இறந்தது தெரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலபந்தல் போலீசார் ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்