< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கழிவறையில் மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
|10 Jun 2022 10:47 PM IST
சங்கராபுரம் அருகே கழிவறையில் மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டில் உள்ள கழிவறைக்கு குளிக்க சென்ற சுப்பிரமணியன், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரது மனைவி மணிமேகலை, உள்ளே சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.