செங்கல்பட்டு
தண்ணீர் வாளியில் தவறி விழுந்த சிறுமி சாவு
|தண்ணீர் வாளியில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி குப்புசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் கோபிகா ஸ்ரீ (வயது 5), ஆட்டிசம் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியான இவர், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தனது தந்தையுடன் தூங்கிகொண்டிருந்தார்.
திடீரென படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்த சிறுமி வீட்டில் தண்ணீர் நிரம்பி இருந்த பிளாஸ்டிக் வாளியில் தவறி விழுந்துள்ளார்.
தூங்கி கொண்டிருந்த மகாலிங்கம் சிறிது நேரம் கழித்து எழுந்து வெளியே வந்து பார்த்தபோது தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் வாளியில் தனது மகள் விழுந்து கிடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மகளை மீட்டு நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஏற்கனவே கோபிகாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.