< Back
மாநில செய்திகள்
வயிற்று வலிக்கு சோடா குடித்த சிறுமி சாவு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

வயிற்று வலிக்கு சோடா குடித்த சிறுமி சாவு

தினத்தந்தி
|
19 May 2022 10:28 PM IST

ஆற்காடு அருகே வயிற்று வலிக்கு சோடா குடித்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் தாஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவரது மகள் அபிராமி (வயது 16). 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்தநிலையில் நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று உள்ளார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த கடையில் சோடா வாங்கி குடித்து விட்டு தூங்கியுள்ளார்.

காலையில் அபிராமியின் வாயில் நுரை தள்ளி உள்ளது. அவரை உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிராமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்