< Back
மாநில செய்திகள்
வீடுகளில் திருட முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வீடுகளில் திருட முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு

தினத்தந்தி
|
27 Aug 2022 9:59 PM IST

தேன்கனிக்கோட்டையில் வீடுகளில் திருட முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேன்கனிக்கோட்டை

வீடுகளில் திருட முயற்சி

தேன்கனிக்கோட்டை எம்.ஜி.ஆர். தெருவில் மர்ம நபர்கள் 4 பேர் அங்குள்ள வீடுகளை வெளிப்புறமாக தாழிட்டு விட்டு திருட முயன்றனர். அதேபகுதியை சேர்ந்த மாது என்பவரது வீட்டின் மாடி வழியாக அவர்கள் சென்று திருட முயன்றனர். அப்போது அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு எழுந்தனர். இதனால் திருட முயன்ற நபர்கள் மாடி வழியாக தப்பிஓடினர்.

அப்போது வீட்டின் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் வாலிபர் ஒருவர் உரசி உள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதில் 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் ஆஸ்பெட்டா சீட்டை உடைத்து கொண்டு வீட்டுக்குள் தொங்கிய நிலையில் கிடந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். அந்த நபர் சூளகிரி பகுதியை சேர்ந்த மன்சூர் (வயது18) என்பதும், வீடுகளில் திருட வந்தபோது மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி இறந்த மன்சூருடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்