< Back
மாநில செய்திகள்
மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு
சேலம்
மாநில செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு

தினத்தந்தி
|
15 Jun 2023 1:24 AM IST

கொண்டலாம்பட்டி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு

கொண்டலாம்பட்டி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரிய புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதானந்தம் (வயது 59), காய்கறி வியாபாரி. இவர், மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியானூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சதானந்தம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதானந்தம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்