< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
சேலம்
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு

தினத்தந்தி
|
15 Jun 2023 1:20 AM IST

சேலத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 35). பெயிண்டர். இவர் நெய்க்காரப்பட்டியில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு பெயிண்டு அடிக்கும் தொழிலில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகிய அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்