< Back
மாநில செய்திகள்
தொப்பூர் கணவாயில் சாலையோரம் நின்ற காரில் வியாபாரி மர்மசாவு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்
தர்மபுரி
மாநில செய்திகள்

தொப்பூர் கணவாயில் சாலையோரம் நின்ற காரில் வியாபாரி மர்மசாவு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்

தினத்தந்தி
|
9 Jun 2023 12:30 AM IST

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் சாலையோரம் நின்ற காரில் தேனி மாவட்டத்தை சேர்ந்த கார் வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கேட்பாரற்று நின்ற கார்

நல்லம்பள்ளி அருகே தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக கார் ஒன்று கேட்பாரற்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற தொப்பூர் போலீசார் காரை திறந்து சோதனை நடத்தினர். அப்போது காரில் ஸ்டேரிங் சீட்டில் அமர்ந்தபடி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரில் இறந்து கிடந்தவர் தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 42) என்பதும், அவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. காரில் சென்ற பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்ததாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தொப்பூர் போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்