< Back
மாநில செய்திகள்
மகேந்திரமங்கலம் அருகேமொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலிமகள், பேத்திகள் காயம்
தர்மபுரி
மாநில செய்திகள்

மகேந்திரமங்கலம் அருகேமொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலிமகள், பேத்திகள் காயம்

தினத்தந்தி
|
13 May 2023 12:30 AM IST

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார். மகள், பேத்திகள் காயம் அடைந்தனர்.

தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). தொழிலாளி. இவருடைய மகள் சிவகாமி (27). இந்த நிலையில் சேகர் தனது மகள் மற்றும் பேத்திகள் கனிஷ் (5), மோனிஷ் (1½) ஆகியோரடன் ஒரு மொபட்டில் பாலக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது மகேந்திரமங்கலம் அருகே பெரிய தப்பை மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி, மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தவறி விழந்த சேகர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணை

மேலும் சிவகாமி மற்றும் கனிஷ், ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மகேந்திரமங்கலம் போலீசார் பலியான சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்