< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
தற்கொலை செய்தவரின் உடல் எரிப்பு
|11 Dec 2022 8:49 PM IST
தற்கொலை செய்தவரின் உடல் எரிப்பு பற்றி தகவல் தெரிவிக்காததால் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கும்பிடுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் இருளாண்டி (வயது40). இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது மனைவி முத்துமாரி என்ற பவானி, ஊர் தலைவர் சிங்காரவேலன், செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடலை எரித்து அடக்கம் செய்து விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நெய்னா முகம்மது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இறந்தவரின் மனைவி உள்பட 3 பேர் மீது கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா? அல்லது தற்கொலையா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.