< Back
மாநில செய்திகள்
ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதல்: தனியார் நிறுவன ஊழியர் சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதல்: தனியார் நிறுவன ஊழியர் சாவு

தினத்தந்தி
|
24 Oct 2023 7:45 PM GMT

ஓசூரில் ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.

ஓசூர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கொட்டாயூர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் இலக்கியராஜன் (வயது 35). இவர் ஓசூரில் அரசனட்டி பாரதி நகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 22-ந் தேதி ஸ்கூட்டரில் ஓசூர்-பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் இலக்கியராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்